”உங்களுடன் ஸ்டாலின்” விண்ணப்பித்து பயன்பெறலாம்

”உங்களுடன் ஸ்டாலின்” விண்ணப்பித்து பயன்பெறலாம்
X
”உங்களுடன் ஸ்டாலின்” குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் ஜூலை 15-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், திண்டுக்கல் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு :- I. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் ” புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” (நீட்ஸ்) மாவட்ட தொழில் மையம் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயனடைய அல்லது இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். https://www.msmetamilnadu.tn.gov.in/needs, https://www.msmetamilnadu.tn.gov.in/aabcs, https://www.msmetamilnadu.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு உரிய இணைப்பு பெறப்பட்டவுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story