கோவை: சின்ன வெங்காயம், கேரட் விலை உயர்வு

X
கோவையில் எம்.ஜி.ஆர். மொத்தமார்க்கெட், அண்ணா மார்க்கெட், டி.கே.மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் சில்லறை கடைகளில் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. தொண்டாமுத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்த சின்ன வெங்காயம், வரத்து குறைவால் கிலோ ரூ.50-இல் இருந்து ரூ.70-க்கு உயர்ந்தது. ஊட்டி மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்த கேரட், ரூ.60-இல் இருந்து ரூ.80-க்கு உயர்ந்துள்ளது. தேங்காயின் விலை ரூ.80-க்கே நிலைத்திருக்கிறது.
Next Story

