மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
X
மானாமதுரை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மேலபிடாவூர் வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனார் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் மற்றும் 126 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சிறிய காளைகளை காளையர்கள் அடக்கினர். மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட மாட்டினை 9 வீரர்கள் சேர்ந்து 25 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும். இல்லையென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியை, சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
Next Story