பால் வியாபாரி கொலை வழக்கில் இருவர் பரபரப்பு கைது!

பால் வியாபாரி கொலை வழக்கில் இருவர் பரபரப்பு கைது!
X
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆயர்பாடியை சேர்ந்த பால் வியாபாரி சஞ்சய்குமார் (23) தனது வாடகை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆயர்பாடியை சேர்ந்த பால் வியாபாரி சஞ்சய்குமார் (23) தனது வாடகை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்தனர். போலீசார் விசாரணையில், வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (20), அவரது நண்பர் நாகராஜ் (19), மற்றும் தனியார் பள்ளி ஆசிரியை கீர்த்தனா (22) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். வாக்குமூலத்தில், கீர்த்தனா குறித்து சஞ்சய்குமார் ஊரில் தவறாக பேசியதால், அவரது உறவினரான கமலக்கண்ணன் முன்விரோதத்தை முன்னிட்டு நாகராஜுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். கொலையின் போது கீர்த்தனா உதவியதாகவும் கூறப்படுகிறது. பட்டாக்கத்தி, 4 செல்போன்கள் மற்றும் ஒரு ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story