காப்பீடு அட்டைக்கு பதிலாக துண்டு சீட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்குவதால் நோயாளிகள் அவதி

X
Komarapalayam King 24x7 |10 July 2025 8:28 PM ISTநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காப்பீடு அட்டை தாமதம் ஆகி வருவதால், நோயாளிகள் அவதிகுள்ளாகி வருகிறார்கள்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காப்பீடு அட்டை தாமதம் ஆகி வருவதால், நோயாளிகள் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது; நோயாளிகள் அவசர சிகிச்சை காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு அவசர நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், மருத்துவ காப்பீடு அட்டை தேவைப்படுகிறது. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீடு அட்டை அலுவலகத்தில் கேட்டால், ஒரு துண்டு சீட்டில் நம்பர் எழுதி தருகிறார்கள். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனையினர், காப்பீடு அட்டை கேட்கிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் கேட்டால், சென்னையிலிருந்து அட்டை வர வேண்டும், என்று கூறுகிறார்கள். அட்டைகள் தீரும் முன்பே ஆர்டர் செய்து வாங்கி வைத்து இருக்கலாம். இதனால் பலரது அறுவை சிகிச்சை தாமதமாகி, அவர்களது உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகி உள்ளது. காப்பீடு அட்டையில் பெயர் பதிவு செய்யும் போது, கவனமில்லாமல், பெயர் மாற்றி பதிவு செய்து விடுகிறார்கள். பெயர் மாற்றம் செய்து வந்தால்தான், சிகிச்சை செய்ய முடியும் என திருப்பி அனுப்பி விடுகிறார்கள். மருத்துவ காப்பீடு அட்டை விஷயத்தில் இது போல் பல முரண்பாடுகள் உள்ளன. திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நபர் சதீஸ்குமார். இவரது மனைவியின் உண்மையான பெயர் சத்திய கலைவாணி, ஆனால் மருத்துவ காப்பீடு அட்டையில், சத்தியபிரியா என்று குறிப்பிட்டு உள்ளார்கள். இதனால் இவரது சிகிச்சை தாமதம் ஆகி வருகிறது. இதே போல் ஈரோடு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் தனசேகரன், பரிமளா ஆகியோருக்கும் இதே போல் முரண்பாடான தகவல்களுடன் மருத்துவ காப்பீடு அட்டை கொடுக்கப்பட்டதால் இவர்களது சிகிச்சையும் தாமதம் ஆகி வருகிறது. மாவட்ட கலெக்டர் இதனை கவனத்தில் கொண்டு, மருத்துவ காப்பீடு அட்டை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
