பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள்

X
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இன்று 10-07-2025 பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப் படுகின்றன.
Next Story

