ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் புத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை.

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் குழந்தை வரம் வேண்டி நடத்தப்படும் புத்திரகாமேட்டி யாக பூஜை நடைபெற்றதில் 300க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் கலந்துகொண்டனர்
ஆரணி ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் குழந்தை வரம் வேண்டி நடத்தப்படும் புத்திரகாமேட்டி யாக பூஜை நடைபெற்றதில் 300க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் கலந்துகொண்டனர். ஆரணி புதுக்காமூர் பகுதியில் குழந்தை வரம் அருளும் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் குழந்தை வரம் அருளும் ஸ்ரீ புத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்று வருகிறது. இந்த யாக பூஜையில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் கலந்துகொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் இந்த ஆண்டு 25 ஆம் ஆண்டாக குழந்தை வரம் வேண்டி சிறப்பு புத்திரகாமேட்டி யாக பூஜை கோயில் வளாகத்தில் காலையில் ஸ்ரீ கணபதி ,ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டு துவங்கியது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட தம்பதியர்களுக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு ஹரிகரன், வைத்தியநாதன், சரவணன் ,ராஜாமணி, மணிகண்டன் ஆகிய சிவாச்சாரியார்கள் தலைமையில் புத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. சிறப்பு யாக பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் பங்கு பெற்றனர். தொடர்ந்து பூஜைகள் பங்கு பெற்ற தம்பதியர்களுக்கு கலசங்கள் ,பிரசாதங்கள் வழங்கப்பட்டன . மேலும் உற்சவர் சுவாமியை ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு கோயில் வெளி வளாகத்தில் சிவபுராணம் பாடியபடி வலம் வந்தனர் . திரளாக பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் மணிகண்ட பிரபு , செயல் அலுவலர் ஹரிஹரன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.
Next Story