ஆலங்குளத்தில் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூரைச் சே்ரந்தவா் விஜயன்(59). ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வெளியே மனுக்கள் எழுதிக் கொடுக்கும் வேலை செய்து வந்தாா். கடந்த ஜூன் 30 ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையைக் கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story

