போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவியை அழைத்து சென்ற வாலிபரை சிறைக்கு அனுப்பிய பேலீசார்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேந்திரன் (22). வேன் டிரைவர். இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 15-வயது மாணவி திருமண ஆசை காட்டி அழைத்து சென்றதாக தெரிகிறது. இதனால் மாணவி வீட்டிற்கு வராமல் இருந்ததால் தந்தை நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் முனிவேந்திரன் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் முனிவேந்திரனின் செல்போனை போலீசார் வாங்கி அதில் ஆராய்ந்து பார்த்தபோது, பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முனிவேந்திரனின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

