கோவையில் கண்களை கவர்ந்த சூப்பர் பக் மூன் நிகழ்வு !

கோவையில் நேற்று வானில் சூப்பர் பக் மூன் எனப்படும் அழகிய முழு நிலவு தென்பட்டது.
கோவையில் நேற்று வானில் சூப்பர் பக் மூன் எனப்படும் அழகிய முழு நிலவு தென்பட்டது. நிலவு பூமிக்கு மிக அருகில் வந்த நிலையில் தோன்றியதால், வழக்கத்தை விட மிகப் பெரியதும், பிரகாசமுமான தோற்றத்தில் காணப்பட்டது. ஜூலை மாத பவுர்ணமி தினமான நேற்று, மாலை 7.42 மணிக்குப் பிறகு நிலவு தென்படும் என முன்கணிப்பு இருந்தது. ஜூலை மாதத்தில் ஆண் மான்களின் கொம்புகள் வளரத் தொடங்குவதால், இந்த முழு நிலவு Buck Moon என்று அழைக்கப்படுகிறது. சூப்பர் மூன் என்பது, நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது தோன்றும் பெரிதும் பிரகாசமான முழு நிலவாகும். இதனை சூப்பர் பக் மூன் என்று அழைக்கப்படும் சூழ்நிலை இன்று கோவையில் உருவானது. இந்த ஆண்டில் ஐந்து சூப்பர் மூன்கள் தோன்றும் என்றும், மேலும் மூன்று முழு சூப்பர் மூன்கள் ஆண்டு இறுதியில் காணப்படும் என்றும், 2026 ஜனவரியிலும் இதுபோன்ற சூப்பர் மூன் ஒன்று தோன்றும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய சூப்பர் பக் மூன் கோவை மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
Next Story