கோவை: காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் !
கோவை மாவட்டம் தடாகம் அருகே கீழ்பதி வீரபாண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மருதன் (65) என்பவர் நேற்று படுகாயமடைந்தார். ராஜேந்திரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, எதிரே வந்த ஒற்றைக்காட்டு யானையை பார்த்து இருவரும் பயந்து ஓடினர். மருதன் முட்புதருக்குள் ஓடிய போது யானை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மருதனை ஆம்புலன்ஸில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



