முன் கண்ணாடி உடைந்த அரசு பேருந்துகள்: கோவையில் பயணிகள் உயிருக்கு ஆபத்து!
கோவை மாவட்டம் சாடிவயல், செம்மேடு, ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில், முன் கண்ணாடி உடைந்த நிலையில் ஓடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வேகத்தடைகள் உள்ள சாலைகளில் இந்த பேருந்துகள் இயங்குவதால், கண்ணாடி விழும் அபாயம் உள்ளது. இந்நிலையில், முன் கண்ணாடிகளை உடனடியாக மாற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



