கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு வீணான தண்ணீர்

X
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் சின்னாளப்பட்டி கூட்டுக் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறியது. தொடர்ந்து வெளியேறிய பல லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரால் அணைப்பட்டி சாலை முழுவதும் ஆற்று வெள்ளம் செல்வது போல் தண்ணீர் ஓடியது. குடிநீர் குழாய் உடைப்பு அருகில் இருந்த தெரு பகுதி முழுவதும் தண்ணீர் ஓடி வழிந்தது. உடைப்பு ஏற்பட்டு பல மணி நேரம் ஆகியும் அதை சீர் செய்வதற்கு குடிநீர் வாரியத்தினர் முயற்சி மேற்கொள்ளவில்லை. சின்னாளப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாகவும் இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக செல்வதாகவும் கூறும் பொதுமக்கள் இத்திட்டத்தினை சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

