சலகெருது சன்ன மாடு ஓட்டம் நிகழ்ச்சி

X
திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை கிராமம் அருகே உள்ள நந்தவன பாறைப்பட்டியில் 15 வருடத்திற்கு பின்பு அருள்மிகு ஸ்ரீ தம்மதாத்தன் மாலை கோயில் ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ கன்னிமார் கோயிலில் மகா கும்பாபிஷேகம் காலையிலும் மற்றும் சலகெருது சன்ன மாடு ஓட்டம் நிகழ்ச்சி மாலையிலும் நடைபெற்றது. இந்தக் கோவில் நிகழ்ச்சியில், திண்டுக்கல், கம்பம், போடி, தேனி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை நடைபெற்ற சலகெருது சன்ன மாடு ஓட்டம் நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றது. இதில், நாயக்கர் சமூகத்தை உள்ள 16 உட்பிரிவு கம்பளத்தாரர்களும் ஒவ்வொரு பிரிவாக தங்கள் மாடுகளை மைதானத்தில் வெள்ளைத் துணியை தாண்ட விட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். அருள்மிகு ஸ்ரீ தம்மதாத்தன் மாலை கோயில் ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ கன்னிமார் கோயில் விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் கமிட்டி சார்பாக செய்யப்பட்டு இருந்தது.
Next Story

