மகன் தலையின் மீது கல்லை போட்டு தந்தை கொலை முயற்சி

மகன் தலையின் மீது கல்லை போட்டு தந்தை கொலை முயற்சி
X
நிலக்கோட்டை அருகே மகன் தலையின் மீது கல்லை போட்டு தந்தை கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு நரசிம்மன் காலனி பகுதியை சேர்ந்த சோமசுந்தரம்(65) மற்றும் இவரது மகன் பச்சைமுத்து(37) இந்நிலையில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை சோமசுந்தரம் மகன் பச்சைமுத்து மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சி செய்தார். இது குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பச்சைமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story