ரயில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி

ரயில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி
X
அஞ்சலி
ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்களுக்கு, சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவ, மாணவியர் 3 பேர் இறந்தனர். விபத்தில் இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் நடந்தது.தாளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். இறந்த மாணவர்களுக்காக, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், செயலாளர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் தாமோதரன், தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், மோட்டார் வாகன சங்க செயலாளர் விஜயகுமார், வள்ளலார் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
Next Story