அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல்

அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல்
X
திண்டுக்கல்லில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் - பேருந்து நிலையம் அருகே வாடகைக்கு வீடு பிடித்த நடைபெறும் அரிசி கடத்தல் - பன்றிகளுக்கு வாங்குவதாக பெண் வாக்குமூலம் - வைரலாகும் வீடியோ
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசிகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் உள்ளபடி கணவன் மனைவி இருவர் குழந்தைகளுடன் பயணிகள் ஆட்டோவில் மூட்டைகளாக அரிசிகளை கொண்டு வந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் வந்து இறக்கி வைக்கிறார். அங்கு ஏற்கனவே பல டன்கணக்கில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட அரிசிகள் எடை போடும் பணிகள் ஆனது நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில், வீடியோ எடுப்பதை தெரிந்தவுடன் கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுடன் ஆட்டோவில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர். அதன் பின்பு அந்த கட்டிடத்தில் உள்ள மீனாட்சி என்ற பெண் இந்த ரேஷன் அரிசிகள் அனைத்தும் பன்றிகளுக்கு உணவுக்காக வாங்குகிறோம். இனி இது போல் செய்ய மாட்டோம் என்பது போல் கூறுகிறார். பின் சிறிது நேரத்தில் இரண்டு ஆட்கள் வந்து ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்ட வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விடுகின்றனர்" என்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி அருகே குறிப்பிட்ட இடத்தில் பல வருடங்களாக ரேஷன் அரிசிகள் வாங்கப்பட்டு பல்வேறு தனியா ரைஸ் மில்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல் தெரிய வருகிறது.
Next Story