இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி

X
சேலம் மாவட்டம் பாலமலை சந்தனபாலிகாடு பகுதியை சேர்நதவர் அண்ணாமலை(30) கூலி வேலை செய்து வருகிறார் நேற்று மாலை அண்ணாமலையும் அவரது உறவினாரான தங்கராஜூம் (29) மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு வந்து ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினர், மோட்டார் சைக்கிளை அண்ணாமலை ஓட்டிசென்றார்.தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்றார் கண்ணாமூச்சி ரோட்டில் ஓலையூர் அடுத்த தார்க்காடு ரேசன்கடை அருகே சென்ற போது மோட்டார் சைக்களின் முன்புற சக்கரத்தின் டயர் திடீரென வெடித்ததால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் அண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டதால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இறந்து போன அண்ணாமலைக்கு ரம்யா(26) என்ற மனைவியும் 1.1/2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

