கோவை: தமிழகத்தில் இனி ஆன்மீக ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை பேச்சு
கோவை சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் நடைபெற்ற குருபௌர்ணமி விழா மற்றும் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் ஜெயந்தி விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.விழாவில் உரையாற்றிய அவர்,குருபௌர்ணமி என்பது குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித நாள். இந்நாளில் சித்தர்களை தரிசிப்பது நன்மை பயக்கும் எனக் கூறினார். சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தனது வாழ்நாளை முன்கூட்டியே அறிந்து, பல சமூகப் பணிகளை முன்னெடுத்ததாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் அணிவித்ததும், தீரன் சின்னமலைக்கு கோட்டை கட்டியதும் குறிப்பிடத்தக்க செயல்கள் எனவும் பாராட்டினார். முடிவில், இனி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது ஆன்மீக அடிப்படையிலானதாகவும், கோவில்களை மையமாகக் கொண்டதாகவும் அமையும் என்றார்.
Next Story




