கோவை: வேகத்தடைகளால் தொந்தரவு – துண்டு பிரசுரம் விநியோகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் முதல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வரை அகலப்படுத்தப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை அமைக்கப்பட்டுள்ள 21 வேகத்தடைகள் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றன. பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும், வாகனங்கள் மற்றும் சரக்குகளுக்கு சேதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதனைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து, வேகத்தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையை வலியுறுத்தினர். அன்றாட பயணத்திற்கு பெரும் சவாலாக உள்ள வேகத்தடைகளைத் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
Next Story



