மேல்விஷாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

X
மேல்விஷாரம் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறையால் நகராட்சி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, வலைகள் வாங்கி நாய்களை பிடிக்க பயன்படுத்தபட்டு வருகிறது. நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன் அடையாளத்துக்காக நாயின் மேல் பெயிண்டு பூச்சுஸ்பிரே செய்யப்படுகிறது. கால் நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, டாக்டர் நித்யவாணி, பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பழனி, பொதுசுகாதார பிரிவு துப்புரவு ஆய்வாளர், பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
Next Story

