நடிகை தமன்னாவுக்கு கோவையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
கோவையில் இன்று இரவு நடைபெறும் "பிளே ஆன் ஸ்டார் நைட் அவுட்" எனும் தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரபல நடிகை தமன்னா நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.அவர் வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தில் காத்திருந்த அவரது ரசிகர்கள், மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். தமன்னாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்களின் சந்தோஷம் காணக் கிடைக்காத அளவிற்கு இருந்தது. நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Next Story




