செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

X
தமிழகத்தில் தடுப்பூசி பணிகளில் இடைநிலை சுகாதார பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும் ,4000 க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும், மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயர்வதை தடுக்கும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சிக்கு எதிராக கணினி பணியில் மூழ்கடிப்பதை தவிர்த்து வேறு நபர்களை நியமிக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தை செவிலியர்கள் பணிகளை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகள் ஏந்திய படி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

