திருப்பத்தூர் அருகே நீர்நிலைகளில் மனித கழிவுகளை கொட்டிவரும் அவலநிலை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நீர்நிலை மற்றும் குடியிருப்பு பகுதியில் நகராட்சி மூலம் சேகரித்த மனித மலக்கழிவுகளை கொட்டுவதற்கு முற்பட்ட நகராட்சி ஊழியர். கவுன்சிலர் பெயரை சொல்லி தப்பிக்க முயலும் போது இளைஞர்களால் விரட்டி அடிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரை அடுத்து திருமால் நகர் 36 வது வார்டு பகுதியில் இருந்து நகராட்சியின் வாகனத்தின் மூலம் அங்கிருந்த ஒரு தனி நபரின் வீட்டில் மனித மலக்கழிவுகளை சேகரித்து அதே பகுதியில் அருகாமையில் இருக்கும் திருப்பத்தூர் பகுதியின் மிகப்பெரிய நீர்நிலை பகுதியாக இருக்கும் பெரிய ஏரி பகுதியிலிருந்து உபரி நீர் வெளியேறி செல்லும் ஆற்றுப்பகுதியில் கொட்டி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் முதல் முறை கொட்டும் போதே எச்சரித்து அனுப்பிய நிலையில் சில மணி நேரம் கழித்து மீண்டும் மனித மல கழிவுகளை சேகரித்து சற்று தள்ளி குடியிருப்பு பகுதிகள் அருகாமையில் இருக்கும் முட்புதர்கள் உள்ள பகுதியில் கொட்ட வந்த போது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் நகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது நகராட்சி மலக் கழிவு சேகரிக்கும் வாகனத்தின் ஓட்டுனர் கவுன்சிலரின் பெயரை சொல்லி தப்பிவிடலாம் என்று எண்ணி பேச முற்பட்டபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கவுன்சிலருக்கு போன் செய்யட்டுமா உண்மையாக அவர் இங்கே கொட்ட சொன்னாரா என்று எதிர் கேள்வி எழுப்பியவுடன் செய்வதறியாது தெரியாமல் ஓட்டுநர் வாகனத்தை அங்கிருந்து தப்பி என்று லாரியை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நகராட்சி நிர்வாகத்தின் இது போன்ற அலட்சியமான செயல்களால் நீர்நிலைப் பகுதி மாசுபடுவது மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்று பொறுப்பற்று செயல்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
Next Story



