கோவில் நிலத்தை ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோடு அருகே செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை பொது ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சிக்காரதனஅள்ளியில் செல்லியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 34 ஏக்கர் நிலம் சில தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஊர் மக்கள் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டதில் நீதிமன்றம் விரைவில் ஏலம் விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது, கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் வராமல் உள்ளதால் கோவை திருப்பணிகள் பூஜைகள் போன்ற கோவிலின் பணிகள் கூட செய்ய முடியாமல் தவித்து வருவதாக புளியமரம் சாய்ந்து விழுந்த 3 மாதமாகியும் அதனை ஏலம் விட அதிகாரிகள் முன் வரவில்லை எனவே உடனடியாக கோவில் நிலத்தை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story