தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் தீடீர் தீவிபத்து

X
தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் முள்செடிகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அனைத்தனர். தூத்துக்குடி, அய்யனடைப்பு, கலாம் நகரில் முள்செடிகளில் தீப்பிடித்துள்ளது. சுற்றிலும் வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் இருந்ததால் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை பரவ விடாமல் முற்றிலும் அணைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story

