ராமநாதபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் சேமிப்பு கிடங்குகள் ஆய்வு

ராமநாதபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் சேமிப்பு கிடங்குகள் ஆய்வு
X
கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கண்ணார்பட்டி உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதல் பதிவாளர் சீனிவாசன்(விற்பனை, திட்டம் மற்றும் வளர்ச்சி.சென்னை) ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டு, விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் விளை பொருட்களை கொள்முதல் செய்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு விற்பனை செய்யவும் அறிவுருத்தினார். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள ஆர்கானிக் மிளகாய் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். சங்கத்தில் கூடுதல் கிடங்குகள் கட்டி, சேமிப்பு பயன்பாட்டை அதிகப்படுத்தவும், உரம், விவசாய விளை பொருள்கள் கொள்முதல், விற்பனை நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தினார். குறிப்பாக இப்பகுதியில் விளையும் முண்டு மிளகாய் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திட,சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மண்டல இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் ராஜலெட்சுமி, சரக துணை பதிவாளர் ரத்தினவேல், மேலாண்மை இயக்குனர் ப்ரீத்தி, சங்கப் பொது மேலாளர் போஸ், கள அலுவலர் சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story