ராமநாதபுரம் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெற்றது

ராமநாதபுரம்  அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெற்றது
X
மாவீரன் அழகு முத்துக்கோன் 268-வது குருபூஜை விழா மாவீரன் அழகு முத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் சிறப்பு ஏற்பாடு
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை ஆண்டுதோறும் யாதவ சமுதாய மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் தி.மு.க,அ.தி.மு.க,பா.ஜ.க,த.வெ.க உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டணம்காத்தான் முனியசாமி நகரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் உள்ள அன்னாரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவீரன் அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ஆர்.எம்.மூர்த்தி,மாவட்ட செயலாளர் எஸ்.முருகன்,மாவட்ட துணைச்செயலாளர் பி.ஆர்.பாண்டி,மாவட்ட பொருளாளர் கே.மார்க்கண்டன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வெளிநாடு வாழ் அறக்கட்டளைகள் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தந்திருந்த அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களை சிறப்பான முறையில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story