திறப்பு விழா கண்டும் பூட்டிய சுகாதார நிலையம்

திறப்பு விழா கண்டும் பூட்டிய  சுகாதார நிலையம்
X
6 மாதமாக பூட்டு
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ 1 கோடியே 20 லட்சத்தில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 2024 ஆம் ஆண்டு இறுதியில் இப்பணி முடிவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் பிப்ரவரி 15ஆம் தேதி இக்கட்டிடம் அமைச்சரால் திறப்பு விழா கண்டது. ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்களோ செவிலியர்களோ பணி அமர்த்தப்படாமல் பூட்டிய நிலையிலேயே உள்ளது. தமிழக முதல்வர் மருத்துவ உதவி சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்படக் கூடாது என்ற சிறந்த நோக்கத்தில் போதிய மருத்துவ வசதிகளுடன், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றை ஏற்படுத்தி பொதுமக்களை நோய்களிலிருந்தும், விபத்து அவசர தேவைகளிலிருந்தும் பாதுகாத்து வருகிறார். முதல்வரின் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் செயல்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒருமுறை கூட பார்வையிட்டு ஆய்வு செய்யாததின் விளைவு ஆரம்ப சுகாதார நிலையம் ஆறு மாதங்கள் ஆகியும் பூட்டிய நிலையில் உள்ளது. எனவே முதல்வர் குளச்சல் பகுதி மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Next Story