குமரியில் போலீசார் வாரவிடுமுறை புதிய செயலி

குமரியில் போலீசார் வாரவிடுமுறை புதிய செயலி
X
தமிழகத்தில் முதன் முறை
குமரி மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை அமல்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டத்தில் போலீசாரின் வார விடுமுறையை கண்காணிக்கும் வகையில் தனி செயலி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. எஸ்.பி. ஸ்டாலின் இந்த ஆப் இயக்கத்தை தொடக்கி வைத்தார். இனி போலீசார் இந்த ஆப் மூலமாக விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். யார், யார் எப்போது வார விடுமுறை எடுக்கிறார்கள், அவர்களுக்கு முறையாக வார விடுமுறை அனுமதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் நேரடியாக எஸ்.பி. கண்காணிக்க முடியும். இதை தொடங்கி வைத்து பேசிய எஸ்.பி. ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தனித்தனி கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த காவல் நிலையங்களில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த க்யூ ஆர் கோடு மூலம் இந்த ஆப்பை பயன்படுத்தி வார விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், ஏ. எஸ். பி. லலித்குமார் மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story