குமரியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு

X
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நகர்ப்புறம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பொது மக்களையும் வீடுகளுக்கே சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் அழகுமீனா இன்று துவக்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணியானது செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டியதால் பொதுமக்கள் உங்கள் இல்லம் தேடி வரும் களப்பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கி சுய விபரங்களை வழங்கிட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மாவட்ட முழுவதும் 170 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான சேவைகள் வீடுகளுக்கே வந்து சேரும் வகையில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இதனால் கடை கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயனடைவார்கள்.
Next Story

