கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

X
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கருதாஊரணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மாள் ஸ்ரீ புத்து முனிஸ்வரர் ஆலய 44 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், அக்கினி சட்டி, வேல் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேத்தி கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து பிரார்த்தனைகளை வேண்டிக் கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story

