தமிழக தேவாங்கர் பேரவை துவக்கம்

தமிழக தேவாங்கர் பேரவை துவக்கம்
X
குமாரபாளையத்தில் புதிதாக தமிழக தேவாங்கர் பேரவை துவக்கப்பட்டது.
குமாரபாளையம் நகரில் தேவாங்கர் சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடந்தி வருகின்றனர். தேவாங்கர் அமைப்புகள் மூலம் கல்வி உதவி தொகை வழங்குதல், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல், ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் செய்து வருகிறார்கள். பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தியும் கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். இதையடுத்து தற்போது தமிழக தேவாங்கர் பேரவை எனும் புதிய அமைப்பு துவக்கவிழா நடந்தது. தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் உறுப்பினர் சேர்க்கை படிவம் 33 வார்டு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில், தேவாங்கர் சமுதாய மக்களுக்கு தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை கூறுதல், மருத்துவ முகாம் நடத்துதல், கல்வி உதவி வழங்குதல், மாணவ, மாணவியரை ஊக்குவித்தல், பல்வேறு போட்டி தேர்வுகளில் தேவாங்கர் சமுதாய மாணவ, மாணவியர்கள் எதிர்கொள்வது எவ்வாறு? என்பது பற்றி சிறப்பு ஆலோசனை வழங்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய அமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து செயலர் உதயராஜ், பொருளர் மனோகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நகரின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர். .
Next Story