புலியூர்: குடிநீர் வரவில்லை என்று காலி குடங்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்று மதியம் அப்பகுதி மக்கள் 25க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலர் முன்பாக காலி குடங்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடப்பட்டனர்.
Next Story

