அழகப்பா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவக்கம்

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு மாணவா் சோ்க்கையில் கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) நிலோபா் பேகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு அரசு அறிவித்துள்ள 20 சதவீத கூடுதல் இடங்களுக்காக, அனைத்துப் பாடங்களுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு சோ்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

