கரூர் அருகே காரின் கதவை விதிகளுக்கு புறம்பாக திறந்து வைத்ததால் டூவீலர் மோதி விபத்து.

கரூர் அருகே காரின் கதவை விதிகளுக்கு புறம்பாக திறந்து வைத்ததால் டூவீலர் மோதி விபத்து.
கரூர் அருகே காரின் கதவை விதிகளுக்கு புறம்பாக திறந்து வைத்ததால் டூவீலர் மோதி விபத்து. கரூர் பாரதிநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 49. இவர் நேற்று முன்தினம் மதியம் 1:15 மணியளவில் கரூர்- சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் எதிரே சென்றபோது கரூர் வெங்கமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை வயது 38 என்பவர் அவரது காரை நிறுத்தி எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் காரின் கதவுகளை திறந்து வைத்திருந்ததால், ஸ்ரீதர் ஓட்டி வந்த டூ வீலர் காரின் கதவில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதரை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ஸ்ரீதர் அளித்த புகாரில், காரை விதிகளுக்கு புறம்பாக நிறுத்தி இருந்த செல்லத்துரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story