சூளகிரி அருகேவேன் மோதி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.

X
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அக்சத் ஆலம் (30) இவர் சூளகிரி அடுத்துள்ள காமன்தொட்டியில் தங்கி பேப்பர் மில்லில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோபசந்திரம் ஓசூர் சாலையில் அவர் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு பிக்கப் வேன் அக்சத் ஆலம் மீது வேகமாக மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

