மகிழ்வண்ணநாத புரத்தில் திமுக அலுவலகம் திறப்பு

மகிழ்வண்ணநாத புரத்தில் திமுக அலுவலகம் திறப்பு
X
திமுக அலுவலகம் திறப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா மகிழ்வண்ணநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன். அறிவழகன், நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்சாமி, பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், கீழப்பாவூர் ராமசாமி, கிளை செயலாளர் சரத்பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் பொன்செல்வன் வரவேற்றார். பேரூர் செயலாளர் ஜெகதீசன், தொகுப்புரை ஆற்றினார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
Next Story