சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் படத்துக்கு மரியாதை

X
ஜெயங்கொண்டம், ஜூலை 11- இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268 -வது குருபூஜையையொட்டி, ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகர் புத்தர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்,மாவட்ட பொதுச் செயலாளர் மரு சுப்பிரமணியன் மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம் நகர தலைவர் வரதராஜன் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் இராமபாலமுருகன்,மற்றும் ரவிச்சந்திரன் செல்வராஜ் உஷா உள்ளிட்ட யாதவ் இன மக்கள் பலர் கலந்து கொண்டு அழகுமுத்துக்கோன் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
Next Story

