நாட்றம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மனைவி டீசல் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை முயற்சி!

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மனைவி டீசல் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.. கணவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அண்ணாதெரு பகுதியில் வசிப்பவர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆன நிலையில் இரண்டு ஆண் குழந்தை உள்ளன. இருவரும் கோவில் திருவிழாவில் பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மீண்டும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இன்று திடீரென மல்லிகா வீட்டில் வைத்திருந்த டீசல் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அருகே உள்ள நிலத்திற்கு சென்று உடல் முழுவதும் டீசல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார் இதனால் உடல் முழுவதும் நான் எரிந்துள்ளது அவருடைய கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து மல்லிகாவை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை செய்யப்பட்டனர் என்பது சதவீதத்திற்கு மேல் தீக்காயம் உள்ள நிலையில் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாட்றம்பள்ளி காவல்துறையினர் இது தொடர்பாக மல்லிகாவின் கணவன் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்றம்பள்ளி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி டீசல் ஊற்றி தன்னைத் தானே எரித்துக் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story

