கிட்டபையனூர் கிராமத்தில் தேங்காய் தலைமீது உடைத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

X
வெலக்கல்நத்தம் அருகேயுள்ள கிட்டப்பையனூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு! திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் கிட்டப்பையனூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது இந்த கோயில் பிரகாரத்தில் ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன், ஶ்ரீ படவேட்டமன், ஶ்ரீ நாகாலம்மன்,ஶ்ரீ தொட்டில்லம்மன், ஶ்ரீ மந்த மாரியம்மன்,ஶ்ரீ கனக நாசியம்மன்,உள்ளிட்ட அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்து வருகிறாள், இந்த கோயில் திருவிழா இன்று வான வேடிக்கையுடன் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது அம்மன் பூங்காரகம்,மற்றும், வீரபத்திர சுவாமி பல்லாக்கு ஊர்வலம், தலைமீது தேங்காய் உடைத்தல், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சாமி வீதிஉலா பாவனிவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து கோயில் பிரகாரத்தில் வந்தடைந்தது பக்தர்கள் தேங்காய் தலைமீது உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர், இந்த விழாவில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்,அம்மனுக்கு அலங்காரம் செய்து பூ வண்ண கோலத்தில் கையில் சூலாயதத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறாள், திரளான பக்தர்கள்.மற்றும் பொதுமக்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர், இந்த விழாவில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர், அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story

