கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் 

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் 
X
ரயில் பயணிகள் சங்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம் நடைபெற்றது.  சங்க தலைவர் கௌதமன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில், "அகல ரயில் பாதை திட்டத்திற்கு முன்பாக இயக்கப்பட்ட காரைக்குடி - சென்னை எக்மோர் விரைவு ரயிலான கம்பன் எக்ஸ்பிரஸை மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் வண்டி எண் 20683 மற்றும் 20684 பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல திருச்சி கோட்ட மேலாளர்,சென்னை தென்னக ரயில்வே மேலாளர் பரிந்துரையை டெல்லி ரயில்வே போர்டு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். ராமநாதபுரம் தாம்பரம் பாம்பன் விரைவு ரயில் வண்டி எண் 16103 மற்றும் 16104 பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல திருச்சி கோட்ட மேலாளர் பரிந்துரை செய்து நிறைவேற்றி தர வேண்டும். பேராவூரணி ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாதாரண வண்டி எண் 06197 மற்றும் 06198 மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையும் அதே மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கும் இயக்க வேண்டும். பேராவூரணி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு மையத்தினை மீண்டும் திறந்திடவேண்டும். ரயில்வே நிலையத்தில் உள்ள பகுதிகள் சுகாதாரமற்ற காணப்படுகிறது அதனை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.
Next Story