பண்டாரம்பட்டியில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம்

பண்டாரம்பட்டியில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம்
X
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில், மாப்பிள்ளையூரணி கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவ்ராஜ் தலைமை வகித்து, சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசு வழங்கினார். உதவி இயக்குநர்கள் ஆபிரகாம் ஜாப்ரி ஞானராஜ், வேல்மாணிக்கவல்லி முன்னிலையில், உதவி மருத்துவர் வினோத் தலைமையிலான குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், 198கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசியும், 100கால்நடைகளுக்கு கால்வாய் நோய் தடுப்பூசியும், 30நாய்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பூசியும், 551 நாய், ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கமும், 35வெள்ளாடுகளுக்கு ஆண்மை நீக்கமும் என மொத்தம் 1299 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் பங்கேற்றனர்.
Next Story