அனைத்து வணிகர்கள் சங்கம் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

X
Komarapalayam King 24x7 |11 July 2025 9:07 PM ISTகுமாரபாளையம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், பிரகாஷ் வரவேற்றனர். ஈரோடு மாவட்ட வணிகர் சங்க தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். வணிகர்களுக்கு உண்டான பிரச்சனைகளையும், கார்ப்பரேட் கம்பெனிகளின் தீமைகளையும், ஆட்கள் குறைப்பு, மற்றும் தொழில் பாதுகாப்பு, போன்ற பல பிரச்சனைகளை பற்றியும், இவைகளை எவ்வாறு தீர்ப்பது? எவ்வாறு வணிகர்களை காப்பது? என்பது பற்றி சண்முகவேல் பேசினார். அனைத்து வணிகர்களுக்கும் ஈரோடு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் பொன்னாடை அணிவித்தார். ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் வேலா சுந்தர்ராஜ், சங்கங்களின் சிறப்புகளை பற்றி பேசினார். வட்டார செயலாளர் காதர் அலி பாபு, வட்டார தலைவர் சுரேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் சேகர், சூர்யா கார்மெண்ட்ஸ் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம், ராஜ்குமார், டிஸ்கோ சம்பத், மனோகரன், ராம்கி, உள்பட ஏராளமான வணிகர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள்.
Next Story
