தெற்கு வாசல் முனீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம்.
மதுரை தெற்கு வாசல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலில் 65 ஆவது ஆண்டு உற்சவ விழா வரும் 18ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இவ் விழாவிற்கு கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வு இன்று (ஜூலை 11) இரவு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கினார்கள். முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





