மகிழ் முற்றம் துவக்க விழா மற்றும் பதவியேற்பு விழா

X
Komarapalayam King 24x7 |11 July 2025 9:21 PM ISTகுமாரபாளையம் மேற்கு காலனி பள்ளியில்மகிழ் முற்றம் துவக்க விழா மற்றும் பதவியேற்பு விழா
குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளி மகிழ் முற்றம் துவக்க விழா மற்றும் பதவியேற்பு விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடந்தது. . கவுசல்யாமணி பேசியதாவது: பள்ளிக்கல்வி அமைச்சரால் கடந்த ஆண்டு மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பானது தொடங்கப்பட்டு, கல்விசார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளை, கல்வி முன்னேற்றத்துடன் ஒருங்கிணைத்து, மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களை வழிநடத்த ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர் தலைவர், தலைவிகள், வகுப்பு தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழு ஒற்றுமை, ஒழுக்கம், சுத்தம், சுகாதாரம், கற்றல் திறன் ஆகியவை மேம்பாடு அடைகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனி, வட்டார கல்வி அலுவலர் அருள், வட்டார வள மைய மேர்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் கணேஷ்குமார், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
