கோத்தகிரி பகுதியில் எவர்சில்வர் பாத்திரங்களால் கால்கள் சிக்குண்டு பாதிக்கப்பட்ட இரண்டு காட்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது:

X
கோத்தகிரி பகுதியில் எவர்சில்வர் பாத்திரங்களால் கால்கள் சிக்குண்டு பாதிக்கப்பட்ட இரண்டு காட்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வனச்சரகம், சுள்ளிக்கூடு காப்புக்காடு அருகில் உள்ள S.கைகாட்டி என்ற கிராமத்திற்கு அருகில் சுமார் 4 வயதுடைய பெண் காட்டு மாடு ஓன்று, இடது பின்னங்காலில் எவர்சில்வர் வளையத்துடன் நடமாடியது கண்டறியப்பட்டு, நீலகிரி மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் அவர்களால், கோத்தகிரி வனசரக அலுவலர் தலைமையிலான வனக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி, காட்டு மாட்டின் காலில் சிக்கி இருந்த எவர்சில்வர் வளையம் அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின் காட்டு மாடு நன்றாக வனப்பகுதிக்குள் நடந்து சென்று விட்டது. அதே போன்று, நேற்று 09.7.25 பிற்பகல், கோத்தகிரி நகர், சக்தி மலை பகுதியில், சுமார் 8 வயதுடைய ஆண் காட்டு மாடு ஓன்று, வலது பின்னங்காலில் எவர்சில்வர் பாத்திரத்துடன் நடமாடியது கண்டறியப்பட்டு, நீலகிரி மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் அவர்களால், கோத்தகிரி வனவர் தலைமையிலான வனக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி, காட்டு மாட்டின் காலில் சிக்கி இருந்த எவர்சில்வர் பாத்திரம் அகற்றப்பட்டது. இதன் மூலம் வனத்துறையினர் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், பயன்படுத்தி முடித்த தங்களுடைய வீட்டு உபயோக பாத்திரங்களை, பொதுவெளிகளிலும் மற்றும் வனப் பகுதிகளிலும் வீசி எறியாமல், முறைப்படி அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Next Story

