தஞ்சாவூர் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தர முடிவு

தஞ்சாவூர் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு தர முடிவு
X
அதிமுக
தஞ்சைக்கு 22-ந்தேதி வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் வருகிற 22-ந்தேதி தஞ்சை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தஞ்சை மாநகரில் உள்ள கரந்தை பகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் கரந்தை பஞ்சு தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகர செயலாளர் சரவணன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், பகுதி செயலாளர் மனோகர், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ரத்தினவேல் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், என்கிற முழக்கத்தோடு, தமிழகத்தில் எழுச்சிப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அவருக்கு கரந்தை பகுதி அ.தி.மு.க. சார்பில் திரளாக கலந்துகொண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் திருஞானம், விவசாய பிரிவு துணை செயலாளர் சிங் ஜெகதீசன், இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அறிவுடை நம்பி, மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சரவணன் நன்றி கூறினார்
Next Story