கடலூர்: நாளை பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

கடலூர் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி , சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, ஶ்ரீ முஷ்ணம், குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (ஜூலை.12) வட்ட வழங்கல் அலுவலர் செல்வமணி தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story