ஓரணியில் தமிழ்நாடு" கீழ்கோத்தகிரி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ ஆய்வு.

கட்சித் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்
"ஓரணியில் தமிழ்நாடு" கீழ்கோத்தகிரி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ ஆய்வு. கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" கழக உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக, 11-7-2025 கீழ் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்ப்பு பணிகளை, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட கழக அவை தலைவர் போஜன், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆல்வின், மாவட்ட IT விங் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெய் விக்னேஷ், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சண்முகநாதன், விசாலாட்சி ராஜூ, BLA2, BDA மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
Next Story